இன்ஸ்டாகிராமிலும் சாதனை படைத்த கேப்டன் கோலி !

கோலி தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன்
Last Modified செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:29 IST)
கோலி தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் நபர்களால் பின் தொடரப்படும் முதல் நபராக சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் இறங்கும் போட்டிகளில் எல்லாம் ஏதாவது ஒரு சாதனையை முறியடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அது போல இப்போது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் தினசரி நடவடிக்கைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதன் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பவர். அதே போல் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஹிட் அடிக்கும். இதையடுத்து அவர் இன்ஸ்ர்டாகிராமில் 5 கோடி பேரால் பின் தொடரப்படும் முதல் இந்தியர் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் திரை நட்சத்திரங்களான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோரும் அடுத்த இடத்தில் இந்திய பிரதமர் மோடி ஆகியோரும் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :