வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:21 IST)

அப்ரிடிக்கு பேட்டை நன்கொடையாக வழங்கிய விராட் கோலி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி தான் கையெழுத்திட்ட பேட்டை நன்கொடையாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.


 

 
இந்தியவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியால் என்றாலே ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது வழக்கம். இந்தியா பாகிஸ்தானை எதிரி நாடாகவே கருதி வருகிறது. கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் இந்தியாவை வெல்ல கூடாது என இந்தியர்கள் எண்ணுவது வழக்கம். 
 
ஆனால் இருநாட்டு கிரிக்கெட் அணி வீரர்களும் நட்புடந்தான் பழகி வருகின்றனர். ரசிகர்கள்தான் விளையாட்டை விளையாட்டாக ரசிக்காமல் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட பேட்டை நன்கொடையாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். 
 
இதற்கு அப்ரிடி நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவரை வரவேற்று பதில் டுவீட் செய்துள்ளார்.