வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (10:21 IST)

கோலியின் அறிவுரையைக் கேட்டு ரிவ்யூ எடுத்த ரோஹித்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கும் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே கருத்து மோதல் நீண்ட காலமாக இருந்து வருவதால சொல்லப்படுகிறது.

பிசிசிஐ உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கேப்டன்சியில் இருந்து கோலி விலகினார். அதையடுத்து இப்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் 10 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இணைந்து விளையாடினர்.

இந்த போட்டியின் போது 22 ஆவது ஓவரில் சஹால் பந்தில் புரூக்ஸுக்கு கேட்சுக்கு அப்பீல் செய்யப்பட்டது. நடுவர் நாட் அவுட் கொடுக்க, கோலி கேப்டன் ரோஹித்திடம் ரிவ்யூ கேட்குமாறு கூறினார். அதை ஏற்று ரோஹித்தும் ரிவ்யு எடுக்க ர்ப்ளேயில் அது அவ்ட் என தெரிய வந்தது. இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.