ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (18:03 IST)

ஐசிசி டி20 தரவரிசையில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர்!

ஐசிசி டி20 தரவரிசையில் நீண்டகாலமாக இந்திய வீரர்கள் இடம் பெறாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு இந்திய வீரர் இடம்பெற்று உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐசிசி டி20 தரவரிசை பட்டியலை சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 5-வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே
 
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளில் இருந்து தலா 2 வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பதும் இந்திய அணியில் இருந்து கேஎல் ராகுல் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது