செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (14:49 IST)

அதிரடி அரைசதம்: விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கே.எல்.ராகுல்!

kl rahul
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டாவது போட்டியாக இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. சற்று முன் வரை இந்திய அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 130 ரன் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில போட்டிகளில் கேஎல் ராகுல் சரியாக விளையாடாத நிலையில் அவருக்கு பதிலாக அணியில் ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்ற குரல் எழுந்து வந்தது இந்த நிலையில் இன்று கேஎல் ராகுல் அதிரடியாக 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 4 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விராட் கோலி தற்போது 40 ரன்களுடன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் எடுத்து8 புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran