அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தவிக்கும் இந்திய அணி

ODI
Last Updated: திங்கள், 29 அக்டோபர் 2018 (16:53 IST)
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ். அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில்  தவானை தொடர்ந்து கோலி அவுட்டாகியுள்ளார்.
 
நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 க்கு என சமநிலையில் உள்ளது.
 
இன்று மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோகித் சிறப்பாக விளையாடினர். இருப்பினும் கே பாலின் 11.5வது ஓவரில் தவான்(38 ரன்கள் எடுத்த நிலையில்) அடித்த பந்தை பொவெல் கேட்ச் பிடித்து அவரை அவுட்டாக்கினார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் கோலி 16.4வது ஓவரில் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோச் ஓவரில் அவுட்டானார். அடுத்ததாக ராயுடு களமிறங்கி விளையாடி வருகிறார். 


இதில் மேலும் படிக்கவும் :