டி.என்.பி.எல் கிரிக்கெட்: காரைக்குடி அணிக்கு த்ரில் வெற்றி: காரைக்குடியை வீழ்த்தியது

Last Modified சனி, 28 ஜூலை 2018 (08:02 IST)
நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் திருச்சி அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி அணி வீழ்த்தியது.
நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். சஞ்சய் 28 ரன்களும், குமார் மற்றும் மணி பரத் ஆகியோர் தலா 22 ரன்களும் அடித்தனர். இதனையடுத்து திருச்சி அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இந்த நிலையில் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய காரைக்குடி அணியினர்களுக்கு ஆரம்பம் சுமாராக இருந்தாலும் அதன்பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். கடைசி ஓவரின்போது காரைக்குடி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 112 ரன்கள் அடித்திருந்தது. 6 பந்துகளில் 3 ரன்கள் எடுக்க வேண்டும், கையில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் ஆட்டம் த்ரில்லாக இருந்தது. இந்த நிலையில் 19.5 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து காரைக்குடி த்ரில் வெற்றி பெற்றது.இதில் மேலும் படிக்கவும் :