1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Kane Williamson injured

கேன் வில்லியம்சன் காயம்… நியுசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு!

டெஸ்ட் சாம்பியன்ஷிப்
நியுசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.

உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கேன் வில்லியம்சன். அவர் இப்போது இங்கிலாந்தில் முகாமிட்டு அந்நாட்டு அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இடது முழங்கையில் ஏற்பட்டு இருக்கும் காயத்தால் அவர் அடுத்து நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. அது போலவெ ஜூன் 18 ஆம் தேதி நடக்கும் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்று சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
இந்தியர்களின் ஆங்கிலத்தை கேலி செய்தனரா மோர்கன் மற்றும் பட்லர்?