வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (12:36 IST)

சிலம்பம் சுற்றும் வீடியோவை வெளியிட்ட சத்யராஜ்! வாவ் என வாய் பிளந்த ரசிகர்கள்!

தமிழ் நடிகர்களில் 60 வயதுக்கு மேலும் உடலைக் கட்டுக்கோப்பாக பேணுவதில் முன்னணியில் இருப்பவர் சத்யராஜும் ஒருவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சத்யராஜ் வில்லன், குணச்சித்திரம் என நடித்து பின்னர் கதாநாயகன் ஆனவர். அதே போல இப்போது கதாநாயகன் வேடத்துக்கு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் குணச்சித்திர வேடங்களில் எல்லா தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சிலம்பம் சுற்றுவதில் ஆர்வம் கொண்டவரான சத்யராஜ் இப்போது சிலம்பம் சுற்றும் ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.