ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (13:10 IST)

நான்காவது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்ய வில்லியம்ஸன் – பாகிஸ்தான் தடுமாற்றம்!

நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் இரட்டை சதத்தால் நியுசிலாந்து அணி இமாலய ஸ்கோரை எட்டியுள்ளது.

பாகிஸ்தான் நியுசிலாந்துக்கு சென்று தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 297 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். 364 பந்துகளில் 28 பவுண்டரிகளுடன் 238 ரன்கள் விளாசி ஃபாஹிம் அஷ்ரப் பந்தில் ஆட்டமிழந்தார். இது அவரின் 4 ஆவது இரட்டைச் சதமாகும்.

இதனால் நியுசிலாந்து அணி 350 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகின்றனர்.