செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (16:38 IST)

ரோஹித்தை விட இவர் கேப்டனுக்கு பொருத்தமாக இருப்பார்… சுனில் கவாஸ்கர் கருத்து!

டி 20 இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இந்திய கேப்டன் விராட் கோலி குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீர்ர் என்ற சாதனை படைத்துள்ளார். அதேசமயம் அவரது தலைமையிலான இந்திய அணி அஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் வென்று சாதித்தது. இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 2 போட்டிகளில் வென்றது. அடுத்து, அவரது தலைமையிலான ஆர்.சி.பி அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றிவாகை சூட பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும், விரைவில் டி-20 உலகக் கோப்பை  தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் டி20 கேப்டன்சிப் பொறுப்பில் இருந்து விராட் கோலி  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அடுத்த கேப்டன் குறித்து கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் ‘கோலிக்குப் பின் அடுத்த கேப்டனை நியமிக்க வேண்டும் என்றால் கே எல் ராகுல் சிறப்பான தேர்வாக இருப்பார். அவர் இதுவரை சிறப்பாகவே விளையாடியுள்ளார். ‘ எனக் கூறியுள்ளார். ஆனால் பல ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் ஷர்மாதான் அடுத்த கேப்டன் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.