புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:42 IST)

ஆர் சி பி அணிக்கு கேப்டன் ஆகிறாரா கே எல் ராகுல்?

ஐபிஎல் தொடரில் இப்போது பஞ்சாப் அணிக்கு கேப்டனாக கே எல் ராகுல் செயல்பட்டு வருகிறார்.

இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஆனால் தனிப்பட்ட வீரராக கே எல் ராகுல் அதிக ரன்கள் சேர்த்து ஆரஞ்ச் தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு அவர் பஞ்சாப் அணியில் இருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏனென்றால் அவரின் சொந்த மாநிலமான பெங்களூர் அணிக்காக இப்போது கேப்டன்சி பொறுப்பை ஏற்றுவரும் விராட் கோலி அடுத்த சீசனில் இருந்து கேப்டன் பொறுப்பை துறக்க உள்ளார். இதனால் கே எல் ராகுலை அந்த பிரான்சைஸ் வாங்கி ஆர் சி பி அணிக்கு கேப்டனாக நியமிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு அணிகள் ஒரு வீரரை மட்டுமே அணிக்கு வைத்து கொண்டு மற்றவர்களை ஏலத்தில் விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.