செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:29 IST)

வேகமாக பரவும் டெங்கு… மக்களே உஷார்!

தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து இப்போது டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இப்போது பரவ ஆரம்பித்துள்ளது. வட கிழக்கு பருவ மழை வேறு தொடங்கி விட்டதால் கொசுக்களின் பெருக்கம் அதிகமாகி இருக்கும். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு சிறப்பு வார்டை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் சில நாட்களுக்கு முன்னர் பார்வையிட்டார்.

இந்நிலையில் மக்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கொசுக்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ளவும் வலியுறுத்தப்படுகின்றனர்.