1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today corona cases in India

நீண்ட நாட்களுக்கு பின் 14 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்!

India
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 14,313 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,39,85,920 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 181 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,50,963 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,33,20,057 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,14,900 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஜோ பைடனுக்கு உதவி செய்த ஆப்கானியர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்பு