1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 ஜனவரி 2022 (09:41 IST)

தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடருக்கு இவர்தான் கேப்டன்… ரோஹித் சந்தேகம்!

இந்திய அணி தற்போது தென் ஆப்ப்ரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடர் முடிந்ததும் ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலயில் புதிதாக ஒரு நாள் தொடருக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக அதில் விளையாடுவது கிட்டத்தட்ட வாய்ப்பில்லாத ஒன்று என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்கு புதிய துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கும் கே எல் ராகுல் அணியை வழிநடத்துவார் என சொல்லப்படுகிறது. விரைவில் இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.