1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (07:50 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கே.எல்.ராகுல் கேப்டன்

தென் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது என்பதும் இதனை அடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் அணியிலிருந்து விலகியதை அடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு கே.எல்.ராகுல்  கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக பும்ரா செயல்படுவார். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்ற இந்திய வீரர்கள் பின்வருமாறு:
 
விராட் கோலி, ஷிகர் தவான், ருதுராஜ் ஜெய்க்வாட், சூர்யகுமார், ஷ்ரேயஸ், வெங்கடேஷ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சஹால் ஆகியோர் தேர்வு
 
அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், தீபக் சஹார், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு