திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (08:54 IST)

கோவில் கூட்ட நெரிசலில் 12 பேர் பலி; 12 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவிலில் புத்தாண்டு இரவு சாமி தரிசனத்திற்காக மக்கள் அதிகளவில் கூடியுள்ளனர். அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு காஷ்மீர் அரசு சார்பில் ரூ.10 லட்சமும், பிரதமர் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் என ரூ.12 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.