டைபிரேக்கரில் வென்ற ஜோகோவிச் – விம்பிள்டன் சாம்பியன் !

Last Modified திங்கள், 15 ஜூலை 2019 (09:33 IST)
லண்டனில் நேற்று நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரை ஜோகோவிச் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

நேற்று உலக விளையாட்டு ரசிகர்களில் பாதிபேர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ரசிக்க மீதிப்பேர் விம்பிள்டனை ரசித்துக் கொண்டிருந்தனர். இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் மற்றும் ஜோகோவிச் இருவரும் மோத போட்டி மிகவும் பரபரப்பாக அமைந்தது.

இருவரும்  ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆட ஆட்டம் பெரிதும் பரபரப்பானது. டைபிரேக்கர் வரை சென்ற இந்த போட்டியை 3-2 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வென்றார்.

இதன்  மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :