திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (06:50 IST)

கொரோனா விதிமுறை மீறல்: போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன் இங்கிலாந்து அணி வீரர் நீக்கம்

போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன் இங்கிலாந்து அணி வீரர் நீக்கம்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் திடீரென அணியிலிருந்து நீக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன் அனைவரும் இரண்டு முறை பரிசோதனைகளை எடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது
 
ஆனால் இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் விதிகளை மீறியதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்ட ஆர்ச்சர், 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவரது தனிமைபடுத்தப்பட்ட காலத்தில் இரண்டு பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் மட்டுமே அடுத்த போட்டி அவர் தொடரில் நீடிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து ஜோப்ரா ஆர்ச்சர் கூறியபோது ’நான் செய்த இந்த செயலுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன் என்றும், நான் என்னை மட்டுமல்ல நிர்வாகம் அனைத்தையும் அபாயத்தில் ஆக்கிவிட்டேன் என்றும் இதன் விளைவுகள் முழுவதையும் நான் பொறுப்பேற்கிறேன் என்றும், என்னுடைய செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்