1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (15:12 IST)

மூன்றாம் நாளில் இங்கிலாந்தை காப்பாற்றிய ஜோ ரூட் & டேவிட் மலான் கூட்டணி!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதும் அந்த அணி 50 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்ட நிலையில் இடைவேளைக்கு பின்னர் திடீரென கனமழை பெய்த காரணத்தினால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கிய நிலையில் ஆஸி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வலுவான ஸ்கோரைக் குவித்தது. மூன்றாம் நாள் காலையில் இன்று 425 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இதனால் ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 277 ரன்கள் முன்னிலை பெற்றது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் போல விக்கெட்களை இழக்காமல் நிதானமாக ஆட்டத்தை கைக்கொண்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சீக்கிரமே ஆட்டம் இழந்தாலும், அதற்கடுத்து வந்த ஜோ ரூட் மற்றும் டேவிட் மலான் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்துள்ளது. ஜோ ரூட் 86 ரன்களோடும், டேவிட் மலான் 80 ரன்களோடும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 58 ரன்கள் பின் தங்கி உள்ளது.