வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash

ஒரே ஏவுகணை... திணற வைத்த வடகொரியா: ஜப்பான் சரண்டர்??

ஜப்பான் அமைச்சரவையின் வடகொரியாவின் ஹவாசாங் – 16 என்ற ஏவுகணை குறித்து பேசப்பட்டுள்ளது. 
 
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை ஒன்று உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. 
 
கொரிய தொழிலாளர் கட்சி நிறுவப்பட்ட 75வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வட கொரியாவின் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அதில் இடம்பெற்ற ஹவாசாங் – 16 என்ற ஏவுகணை உலக நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
இந்நிலையில் ஜப்பான் அமைச்சரவையின் வடகொரியாவின் ஏவுகணை குறித்து பேசப்பட்டது. அதில், வடகொரியாவின் புதிய ஏவுகணைகளில் சிலவற்றை எங்களின் வழக்கமான உபகரணங்களை கொண்டு சமாளிப்பது கடினம் என்று கூறப்படுவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். 
 
அதேசமயம் பன்முகப்படுத்தும் மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்களுக்கு பதில் அளிப்பதற்காக எங்கள் விரிவான ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த நாங்கள் உறுதியாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உண்மையில் ஐசிபிஎம் வகை ஏவுகணைகளில் உலகிலேயே மிகப்பெரிய ஏவுகணையாக இது கருதப்படுகிறது. இதனால் கொரியாவில் இருந்த நிலையிலேயே உலகின் எந்த நாட்டின் மீதும் இந்த ஏவுகணையை எளிதில் ஏவ முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பங்களும் இதன் மீது செல்லுபடியாகாது என பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.