36 ரன்கள்தான் வித்தியாசம்; முச்சதம் எளிதான ஒன்றுதான்; மும்பை டான் விளக்கம்
மூன்று முறை இரட்டை சதம் அடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் முச்சதம் அடிப்பது எளிதான ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியி கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்று இலங்கை எதிராக விளையாடிய ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் மூன்று முறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் இந்திய அணியின் வீரர் ரோகித் சர்மா தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் முச்சதம் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-
முச்சதம் அடிப்பது சாத்தியமானதுதான். ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கும்போது அவருக்கு 50 ஓவர்கள் உள்ளது. சதம் விளாசிய பின் எந்த தவறும் செய்யாமல் விளையாடினால் அனைத்தும் சாத்தியமே. பிட்ச மற்றும் அந்த நாள் நமக்கானதாக அமையும்போது எல்லாமே சாத்தியம்.
264 ரன்களுக்கு 300க்கும் வெறும் 36 ரன்கள்தான் வித்தியாசம். இதனால் முச்சதம் சாத்தியமான ஒன்றுதான். சதம் விளாசிய பின் பவுலர்கள் உங்களை குறிவைத்து ஆடுவார்கள். அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவர்கள் செயல்படுவார்கள். அப்போது ஏதாவது தவறு செய்தால் நடையை கட்ட வேண்டியதுதான்.
இவ்வாறு ரோகித் சர்மா முச்சதம் அடிப்பது குறித்து நம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார்.