அரையிறுதியில் இத்தாலி-ஸ்பெயின் மோதல்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அணி எது?
அரையிறுதியில் இத்தாலி-ஸ்பெயின் மோதல்:
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் யூரோ கால்பந்து போட்டியை கால்பந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது இந்த தொடரின் இறுதி கட்டத்தை வந்துள்ளது என்பதும் இன்று இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் அரையிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இரு அணி வீரர்களும் ஆவேசமாக விளையாடினார்கள் என்பதும் தாங்கள் கோல் போட வேண்டும் என்பதைவிட தங்கள் எதிர் அணிக்கு கோல் கிடைத்து விடக்கூடாது என்பதில் கவனத்துடன் விளையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது இதனால் இரு அணிகளும் போட்டி நேர முடிவின் போது தலா ஒரு கோல் கள் மட்டுமே போட்டிருந்ததால் போட்டி டிரா ஆனது
இதனையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பெனால்டி கிக் முறை அமல்படுத்தப்பட்டது. இத்தாலி 4 கோல்களும் மற்றும் ஸ்பெயின் இரண்டு கோல்களும் போட்டதால் இத்தாலி அணி 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனை அடுத்து இத்தாலி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்,