புல்புல் புயல் எதிரொலி; விமான நிலையம் மூடல்

Arun Prasath| Last Modified சனி, 9 நவம்பர் 2019 (17:54 IST)
வங்காள விரிகுடாவில் புல்புல் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் கொல்கத்தாவில் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

வங்க கடலில் புல்புல் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், கடல் பகுதியில் 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கூறப்படுகிறது. மேலும் இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புல்புல் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 6 முதல் நாளை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :