இங்கிலாந்து பத்திரிக்கையாளரை விளாசிய வீரேந்தர் சேவாக்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (15:02 IST)
நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 2 பதக்கங்களை மட்டுமே பெற்றது குறித்து இங்கிலாந்து பத்திரிக்கையாளர் விமர்சனத்திற்கு இந்திய் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர ஷேவாக் பதிலடி கொடுத்துள்ளார்.
 
 
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் 2016 போட்டியில் இந்திய அணி சார்பாக 2 பதக்கங்கள் மட்டுமே பெற முடிந்தது. சாக்‌ஷி மாலிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கமும், பிவி சிந்து பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.
 
இந்நிலையில், இந்தியா இரண்டு பதக்கங்கள் பெற்றது குறித்து விமர்சித்துள்ள இங்கிலாந்து பியர்ஸ் மோர்கன், ”120 கோடி மக்கள் கொண்ட ஒரு தேசத்தில் 2 பதக்கங்கள் பெற்றதுக்காக கொண்டாடுவது என்ன ஒரு அபத்தம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள வீரேந்தர் சேவாக், “நாங்கள் சிறிய சந்தோஷங்களையும் கொண்டாடுகின்றோம். கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து ஏன் இதுவரை ஒரு உலகக்கோப்பையை கூட வெல்லவில்லை. இப்பொழுதும் விளையாடிக் கொண்டாடிக்கிறது. இது அபத்தம் இல்லையா?” என்று பதிலடி கொடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :