வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 8 மே 2023 (09:18 IST)

கள்ளச்சந்தையில் சென்னை-டெல்லி போட்டியின் டிக்கெட்: 2 பேர் கைது..!

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே வரும் பத்தாம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் பத்தாம் தேதி சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளதை அடுத்து நேற்று இரவு முதல் ரசிகர்கள் டிக்கெட் வாங்க ஆர்வத்துடன் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் வெளியானதை அடுத்து டிக்கெட் விற்பனை செய்யும் இடத்திற்கு திடீரென காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது ஐபிஎல் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று சொல்லி

Edited by Siva