1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (08:59 IST)

நாளை ஐபிஎல் ஏலம்: சென்னை அணி குறி வைப்பது யார் யாரை?

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் நாளை கொல்கத்தாவில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் முன்னணி வீரர்களை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகள் தயாராகி வருகின்றன
 
சென்னை அணியிடம் 14.6 கோடி ரூபாயும், மும்பை அணியிடம் 13.5 கோடி ரூபாயும், சன் ரைசர்ஸ் அணியிடம் 17 கோடி ரூபாயும், பஞ்சாப் அணியிடம் 42 கோடி ரூபாயும் இருப்புத் தொகையாக உள்ளது. அதேபோல் கொல்கத்தா அணியில் 35.6, கோடி ரூபாயும், பெங்களூர் அணியில் 7.9 கோடி ரூபாயும் கையிருப்பு உள்ளது. மேலும் ராஜஸ்தான் அணியிடம் 28.9 கோடியும், டெல்லி அணியிடம் 27.8 கோடி இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
வெளிநாட்டு வீரர்களான கிறிஸ்லின், மோர்கன், பேட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர்களை ஏலம் எடுக்க பல அணிகள் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய வீரர்களான பரிந்தேர் ஸ்ரன், கேஎஸ் பரத், பெரியசாமி, உனாகட் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர்களை எடுக்கவும் பல அணிகள் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
சென்னை அணியை பொறுத்தவரை கிறிஸ்லின், மோர்கன், ஜேம்ஸ் நீஷம்ஆகியோர்களை ஏலம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது