புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By siva
Last Updated : ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (20:56 IST)

டெல்லியை கட்டுப்படுத்திய சென்னை: 16 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே!

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே பிளே ஆப் சுற்றுக்கு நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது
 
சற்றுமுன் வரை டெல்லி அணி 16 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினாலும் பிரித்விஷா மட்டும் அதிரடியாக விளையாடி 60 ரன்கள் எடுத்தார் அதன் பின்னர் அக்சர் பட்டேல் விக்கெட்டும் விழுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மையர் ஆகிய இருவரும் தற்போது விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியை பொறுத்தவரை ஹசில்வுட் இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா மற்றும் மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடதக்கது
 
இன்று வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் சென்னை மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.