திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2024 (10:44 IST)

செல்பி எடுக்க ஆசைப்பட்டு எரிமலைக்குள் விழுந்த பெண்! – இந்தோனேஷியாவில் சோகம்!

இந்தோனேஷியாவில் எரிமலை அருகே செல்பி எடுக்க விரும்பிய பெண் எரிமலைக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சீனாவை சேர்ந்த ஹூவாங் லிஹோங் என்ற பெண்மணியும் அவரது கணவரும் சமீபத்தில் இந்தோனேஷியா சுற்றுலா சென்றுள்ளனர். இந்தோனேஷியாவில் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் தொடர்ந்து கொதிக்கும் எரிமலைகள் 100க்கும் மேல் உள்ளன. இதில் சில எரிமலைகள் அருகே செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.


அப்படியாக அனுமதிக்கப்பட்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இஜென் என்ற எரிமலையை சுற்றி பார்க்க சீன தம்பதிகள் சென்றுள்ளனர். அப்போது எரிமலை அருகே செல்பி எடுப்பதற்காக மிக அருகே ஹூவாங் சென்றுள்ளார். மிக அருகில் செல்ல வேண்டாம் ஆபத்து என சுற்றுலா வழிகாட்டி எச்சரித்தபோதும் அதை பொருட்படுத்தாமல் ஹூவாங் அருகில் சென்றபோது பலமான காற்று வீசியதில் பள்ளத்திற்குள் தூக்கி எறியப்பட்டுள்ளார்.

இதனால் 246 அடி பள்ளத்திற்குள் விழுந்த ஹூவாங் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K