1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (10:43 IST)

கொரோனா தடுப்பூசியால் 42 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் தடுப்பு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியால் 2021 ஆம் ஆண்டில் 42 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக தகவல். 

 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,940 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,78,134ஆக உயர்ந்தது. புதிதாக 20 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,974 ஆக உயர்ந்தது.
 
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியால் 2021 ஆம் ஆண்டில் 42 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் நிகழ வேண்டிய சாத்தியமான 3.14 கோடி கொரோனா மரணங்களில் 1.98 கோடி இறப்புகள் தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன. 
 
டெல்டா வைரஸ் முதல் முறையாக இந்தியாவில் பரவிய போதிலும், தடுப்பூசிகள் தான் பல லட்சம் உயிர்களை காப்பாற்றி உள்ளன.