தொடர்புடைய செய்திகள்
- இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!
- இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா
- இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!
- இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!
- இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!
டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக சாய் சுதர்சன் இருந்து வருகிறார். குஜராத் அணிக்காக ஆடிவரும் அவர் தற்போது அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார். தற்போதைய டி 20 போட்டிகளில் வீரர்கள் விதவிதமான ஷாட்களைக் கண்டறிந்து விளையாடி வருகிறார்கள். ஆனால் சாய்சுதர்சன் பழைய டெஸ்ட் கால பேட்ஸ்மேன்கள் போன்ற ஒரு மரபான வீரர். மரபான ஷாட்களை மட்டுமே ஆடி ரன்களை சேர்த்து வருவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் சேவாக் “சாய்சுதர்சன் டி 20 போட்டிகளில் கூட டெஸ்ட் போட்டிகள் போல ஷாட்களை ஆடமுடியும் என்றும் அதே நேரத்தில் டி 20 போட்டிகளுக்கான ஸ்ட்ரைக் ரேட்டிலும் தன்னால் விளையாட முடியும் எனக் காட்டியுள்ளார். அவர் இந்திய அணிக்காக மூன்று விதமானப் போட்டிகளிலும் விளையாடத் தகுதியுள்ளவர்” எனக் கூறியுள்ளார்.