16 ஓவர்களில் 3 முக்கிய விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ரோஹித், சுப்மன், விராத் அவுட்..!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால், ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மூன்றாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இரண்டு ரன்களுக்கு அவுட்டாகினார். அதன் பின்னர், ஆறாவது ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா அவுட் ஆனார். ஏழாவது ஓவரில் விராட் கோலியும் அவுட் ஆனதால், இந்திய அணி தொடர்ந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
தற்போது, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் இணைந்து விளையாடி வருகின்றனர். அண்மை தகவலின்படி, இந்திய அணி 16 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும். இரண்டாவது இடத்தை பெறும் அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva