வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 செப்டம்பர் 2018 (09:57 IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி - ஹாக்கியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்ட இந்திய மகளிர் அணி

ஆசிய விளையாட்டு ஹாக்கிப் போட்டியில் ஜப்பானுடன் மோதிய இந்திய பெண்கள் அணி தங்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி இறுதிப் போட்டிக்கு  தகுதி பெற்றது.
 
நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற  இறுதிப்போட்டியில் இந்தியா ஜப்பான் அணியுடன் மோதியது. பெணால்டி கார்னர் முறையில் 12-வது நிமிடத்தில் ஜப்பான் கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்னீத் கோல் அடித்தார். இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது.
 
பின் 44-வது நிமிடத்தில் ஜப்பான் மீண்டும் பெணால்டி கார்னர் முறையில் கோல் அடித்தது. ஆனால் எவ்வளவு போராடியும் இந்திய வீராங்கனைகளால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில், ஜப்பானிடம் தோல்வியை தழுவி தங்கப்பதக்கம் பெறும் வாய்ப்பை நழுவவிட்டது. இறுதியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்கள்.