1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (16:18 IST)

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி போராடி தோல்வி!

india vs pak
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணி 19.4 ஓவரில் 124 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது
 
கடைசி கட்டத்தில் சிக்சர் மற்றும் பவுண்ட்ரிகளாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடித்தாலும் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்தால் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பதும் பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by siva