மகளிர் முத்தரப்பு கிரிக்கெட்: மே.இ.தீவுகளை வீழ்த்தியது இந்தியா!
இந்தியா தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் நேற்று இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளின் போட்டி நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 20 ஓவர் களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 95 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணி 13.5 அவர்களின் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 7 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும் மேற்கிந்த தீவுகள் அணி ஒரு புள்ளிகள் கூட பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது
Edited by Mahendran