பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் இலக்கு கொடுத்த ஐதராபாத்!

Last Modified திங்கள், 8 ஏப்ரல் 2019 (21:53 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22வது போட்டியான இன்றைய போட்டியில் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 70 ரன்களும், விஜய் சங்கர் 26 ரன்களும், மனிஷ் பாண்டே 19 ரன்களும் எடுத்தனர். கடைசி மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்த தீபக் ஹூடா 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என விளாசி 14 ரன்கள் அடித்தார்.
பஞ்சாப் தரப்பில் முஜீப் ரஹ்மான், முகமது ஷமி மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். மேலும் ராஜ்புத் தவிர ஏனைய நான்கு பந்துவீச்சாளர்களும், 4 ஓவர்கள் வீசி 30 ரன்களும், அதற்கு மேலும் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது. கிறிஸ் கெய்லே, மில்லர், போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இந்த இலக்கை எட்ட உதவுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :