1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 டிசம்பர் 2018 (15:18 IST)

தோனியை காலில் விழ வைப்பதா? சாக்‌ஷிக்கு செம டோஸ்

சமீபத்தில் தோனியின் காதல் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றால் தோனி ரசிகர்களிடம் பயங்கரமாக டோஸ் வாங்கியுள்ளார். 
 
பொது இடம் என்று கூட பாராமல் தோனி தனது மனைவிக்கு, ஷூ மாட்டிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைராலானது. இந்த வீடியோ மூலம் தோனி தன் மனைவி மீது வைத்துள்ள காதல் வெளிப்பட்டது. 
 
முதலில் இது பலரை கவர்ந்தாலும், தற்போது இதனால் சாக்‌ஷி திட்டு வாங்கி வருகிறார். ஆம், அந்த வீடியோவோடு அவர் வெளியிட்ட வாசகம் தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
நீங்க தான் காசு கொடுத்து இந்த ஷூவை வாங்குனீங்க.. நீங்களே மாட்டி விடுங்க என சாக்‌ஷி கணவன் மனைவிக்குள் இருக்கும் செல்லமான உரையாடலாக இதனை பதிவிட்டிருந்தார். 
 
ஆனால், தோனியின் ரசிகர்கள் சிலரோ இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு, தோனி இல்லாவிட்டால் உங்களை எங்களுக்கு யார் என்றே தெரியாது, தோனிதான் உங்களுக்கு இந்த பகட்டான வாழ்க்கையை கொடுத்தார். அவரையே அவமானப்படுத்தும் வகையில் இப்படி ஷூ மாட்டுவதை வீடியோ எடுத்துள்ளீர்கள் என்று திட்ட வருகின்றனர்.