வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (10:49 IST)

உலகக்கோப்பை முழுவதும் மனைவியுடன் தங்கிய வீரர் யார் ? –கிளம்பியது புதுச்சர்ச்சை !

இந்திய மூத்தவீரர் ஒருவர் உலகக்கோப்பை முழுவதும் தனது மனைவியைத் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பை அரையிறுதித் தோல்வி, தோனி ஓய்வு என சர்ச்சைகளைத் தாண்டி மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டிருக்கும் வேளையில் இந்திய அணி குறித்து மீண்டும் ஒரு சர்ச்சைக் கிளம்பியுள்ளது. இந்திய அணி வெளிநாடு சென்று விளையாடும் போது வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தைத் தங்கவைத்துக்கொள்வதற்கு சில விதிமுறைகளும் சில கட்டுப்பாடுகளும் உள்ளது.

அதுபோல உலகக்கோப்பைக்காக இங்கிலாந்து சென்ற போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் போட்டிக்குப் பின்னரே தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தைத் தங்களோடு தங்க வைத்துக்கொள்ள அனுமதி. ஆனால் இந்திய மூத்தவீரர் ஒருவர் ஆரம்பம் முதலே தனது மனைவியைத் தன்னோடு தங்க வைத்துக்கொண்டதாகவும் அதற்காக பிசிசிஐ அவர் மேல் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அந்த மூத்த வீரர் யார் என்ற விவரம் வெளியாகவில்லை. இந்திய அணியைப் பொறுத்தவரை மூத்த வீரர்கள் என்றால் ரோஹித், கோஹ்லி,தோனி ஆகிய மூவர்தான். இவர்களில் யாரோ ஒருவர்தான் அவ்வாறு செய்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.