1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. MS Dhoni has no immediate plans to retire, says longtime friend

தோனிக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை: முக்கிய நபர் வெளியிட்ட தகவல்!

MS Dhoni
தோனிக்கு தற்போது ஓய்வு பெறும் எண்ணமில்லை என தோனியின் நீண்ட நாள் நெருங்கிய நண்பர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார். 
 
இந்திய கிரிக்கெட் அணி நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் இந்திய அணி வெளியேறிய பின்னர் தோனியின் ஓய்வு குறித்து பலவராக பேசப்பட்டு வருகிறது. 
 
மேலும், தோனி தன் ஓய்வை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி தோனி தானாக முன்வந்து ஓய்வை அறிவிக்காவிட்டால் அணியில் அவர் சேர்க்கப்படமாட்டார் எனவும், அப்படியே சேர்க்கப்பட்டாலும் ஆடும் லெவனில் அவர் இருக்க மாட்டார் என தெரிகிறது. 
 
இந்நிலையில், தோனியின் நெருங்கிய நண்பர் அருண் பாண்டே தோனிக்கு உடனே ஓய்வை அறிவிக்கும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சிறந்த வீரரை ஓய்வு குறித்து மீண்டும் மீண்டும் பேசுவது வருத்தத்தை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
’தல’ தோனி ஓய்வு பெற வேண்டும்... முன்னாள் வீரர் ’ஓபன் டாக் ’