வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (21:36 IST)

’தல’ தோனி ஓய்வு பெற வேண்டும்... முன்னாள் வீரர் ’ஓபன் டாக் ’

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் தோனி. எத்தை இக்கட்டான நிலையிலும் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற முன்னாள் கூல் கேப்டனாக வலம் வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பையில் தோனியில் பங்களிப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
அவரது ஓய்வு குறித்துக் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்  மற்று எம்பியான கவுதம் காம்பீர் தோனி குறித்து கூறியுள்ளதாவது : தோனி, முக்கிய வீரராக இருந்தார், ஆனால் அவர்  தற்போது விடைபெற வேண்டிய நிலை வந்து விட்டது. என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும்  தோனி ஒரு  சிறந்த வீரர் என்பதை மறுக்க முடியாது . ஆனால் அவர் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும். அதற்கான செயல்முறைகள் குறித்து தோனி  யோசிக்க வேண்டும் என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.