திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (15:47 IST)

கோலகலாமாக தொடங்கும் ஒலிம்பிக் விழா! – வராத இந்திய வீரர்கள்!

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க விழா கோலகலமாக தொடங்கும் நிலையில் இந்திய வீரர்கள் சிலர் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடக்க இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் முதல் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் டோக்கியோவுக்கு வந்துள்ள ஒலிம்பிக் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை நடைபெறும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் சில இந்திய வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த சில நாட்களில் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் 7 போட்டிகளை சேர்ந்த இந்திய விளையாட்டு வீரர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறை காரணமாக தொடக்க விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.