1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 31 ஜனவரி 2018 (20:14 IST)

இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும்; சவுரவ் கங்குலி நம்பிக்கை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

 
நியூசிலாந்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற உள்ள இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
 
இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது:-
 
இந்த உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும். இந்த இளம் வீரர்களை இந்திய கிரிக்கெட் அணியின் வடிவமைப்பு சிறந்த வீரர்களாக மாற்றியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய அணியை வேறு எந்த அணியாலும் அசைக்க முடியாது என்று கூறியுள்ளார்.
 
19 வயது உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பவர் ராகுல் டிராவிட் குறிப்பிடத்தக்கது. ராகுல் டிராவிட் போல் ஒருவர் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.