இந்திய கிரிக்கெட் அணி தரவரிசையில் நம்பர் ஒன்!

India
Last Updated: புதன், 3 அக்டோபர் 2018 (13:13 IST)
ஆசிய கோப்பை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்மிகுந்த உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.  அதே சமயம் ஐ.சி.சி தர வரிசையில் முதலிடத்தை தக்கவைக்க அடுத்து நடக்கவிருக்கிற வெஸ்ட் இண்டீஸ் உடனான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டியது சவாலும் அவர்களுக்கு  உள்ளது.
டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி  115 புள்ளிகள் பெற்றுமுதலிடத்தில் உள்ளது.
அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணி 106 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.
 
இந்நிலையில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை 2- 0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றினால் இந்திய அணி தொடர்ந்து தரவரிசையில் முதலிடத்தை தக்க வைக்க வாய்ப்புள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :