1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (19:47 IST)

3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

toss
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது
 
சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்
 
இதனை அடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் முழுமையான வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே தொடர்ச்சியாக 12 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்ற இந்தியா 13வது போட்டியிலும் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் அதே நேரத்தில் ஆறுதல் வெற்றி பெற மேற்கிந்திய தீவு அணியினர் தீவிரமாக முயற்சிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது