1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (17:08 IST)

இலந்தை பழத்தின் மருத்துவகுணங்கள் என்ன தெரியுமா...?

Elantha Pazham
இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டால் மன அமைதி ஏற்படுவதுடன் ஆழ்ந்த உறக்கம் வரும். உடலில் உள்ள பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தை பழத்துக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.


ஒரு சிலருக்கு சில காரணங்களால் பசியின்மை ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. இலந்தை பழம் பசியின்மை பிரச்சனையை சுலபத்தில் தீர்க்கும்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படைய செய்யும். இக்காலத்தில் பெண்கள் இலந்தை பழங்களை சாப்பிட்டு வந்தால் ரத்த போக்கு அதிகம் ஏற்படாது.

மலைப்பாங்கான இடங்களிலோ, நீண்ட தூரம் பேருந்தில் பயணம் செய்யும்போதும் சிலருக்கு குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் போன்றவை உண்டாகும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படாது.

சிலருக்கு அடிக்கடி உடல்வலி, அசதி போன்றவை ஏற்படும். இவர்கள் சிறிது நேரம் வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

இலந்தையில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜென்ட்கள் உடலில் உள்ள கோளாறுகளையும், நோய்களை நீக்கவும், நிணநீர் மண்டலத்தின் மீதுள்ள அழுத்தத்தையும் குறைக்கின்றன.