வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (16:15 IST)

ப்ளான் பக்காவா இருக்கு... இந்தியாவின் பாக். மீதான அட்டாக் எப்போது?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் நடந்த ராணுவத்திடம் ஏராளமான திட்டங்கள் உள்ளதாக புதிய தலைமை தளபதி நராவனே தெரிவித்துள்ளார்.
 
முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உருவாக்கப்பட்டு அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.
 
தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, காலியாக உள்ள ராணுவ தளபதி பதவிக்கு நராவனே நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் அவர் ராணுவ தளபதியாகவும் பதவியேற்றுக்கொண்டார்.
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், எல்லையில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருப்பதையும், ஊடுருவல் நடக்காமல் இருப்பதையும் ராணுவம் உறுதி செய்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசு கேட்டுக் கொண்டால், ராணுவத்திடம் உள்ள ஏராளமான தாக்குதல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.