திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (07:50 IST)

இந்திய மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட உக்ரைன் அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்!

இந்திய மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட உக்ரைன் அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்!
இந்திய மாணவிகளிடம் உக்ரேன் அதிகாரிகள் குடித்துவிட்டு தவறாக நடக்க முயற்சி செய்ததாக இந்தியா திரும்பிய மாணவர்கள் மாணவிகள் குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்று வரும் நிலையில் உள்ள இந்திய மாணவ மாணவிகள் அங்கிருந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையத்தில் ரயில் ஏற இருந்த தங்களிடம் 200 டாலர் வரை உக்ரைன் அதிகாரிகள் லஞ்சம் கேட்ட தாகவும் பணம் தராதவர்களை குச்சிகளைக் கொண்டு அடித்து உதைத்த தாகவும் இந்திய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
 
மேலும் மது போதையில் இருந்த உக்ரைன் அதிகாரிகள் மாணவிகளுடன் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
மேலும் இந்திய தூதரகம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் தங்களுக்கு தாமதமாகவே கிடைத்ததாகவும் 10 கிலோ மீட்டர் வரை நடந்து சென்றுதான் ரயில்களை பிடித்ததாகவும் இந்தியா திரும்பிய மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்