செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (07:29 IST)

2ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் என்பது 229 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 2-வது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்த நிலையில் தற்போது ரஹானே மற்றும் புஜாரே ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த அணி தற்போது 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும், இன்று 3வது நாள் ஆட்டம் தொடரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.