புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (18:45 IST)

5 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர்: தொடரை வெல்லுமா இந்தியா?

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதை அடுத்து தென்னாபிரிக்கா பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். 
 
ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி தற்போது விளையாடி வரும் நிலையில் அந்த அணி சற்று முன் வரை 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் 11 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும், முகமது சமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது