புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (21:05 IST)

2வது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த இந்தியா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. 
 
முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் எடுத்தன. இதனை அடுத்து 27 ரன்கள் பின்தங்கி இருந்த இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது
 
இந்திய அணி சற்று முன் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புஜாரா மற்றும் ரஹானே விளையாடி வருகின்றனர்